×

ஆட்டோ கவிழ்ந்து விபத்து: 8 மாணவிகள் காயம்

 

தேனி, மார்ச் 12: தேனி நகர் வால்கரடு பைபாஸ் ரோட்டில் தனியார் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் இருந்து நேற்று மாலை 8 மாணவிகளை தேனி அல்லிநகரம் அம்பேத்கர் தெற்குத் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பரமன்(42) ஏற்றிக்கொண்டு பெரியகுளம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் இடதுபுறம் திடீரென ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் ஆட்டோவில் பயணித்த 8 சிறுமிகளுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த அல்லிநகரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம்பட்ட சிறுமிகளை மீட்டனர். அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடுகளுக்கு திரும்பினர். இந்த விபத்து குறித்து அல்லிநகரம் போலீசார் ஆட்டோ டிரைவர் பரமன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆட்டோ கவிழ்ந்து விபத்து: 8 மாணவிகள் காயம் appeared first on Dinakaran.

Tags : Theni ,Theni Nagar Valgaradu Bypass Road ,Paraman ,Theni Allinagaram Ambedkar South Street ,Peryakulam Road ,Dinakaran ,
× RELATED தேனியில் இலவச மருத்துவ முகாம்